முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் மாநில புதிய முதல்வராக பா.ஜ.கவின் சர்பானந்தா சோனோவால் பதவியேற்றார் : பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016      இந்தியா
Image Unavailable

 கவுகாத்தி  -  அசாம் மாநில புதிய முதல்வராக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சர்பானந்தா சோனோவால் நேற்று பதவியேற்றார் .அவரது பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அசாம் மாநிலத்தில் கடந்த 15ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியே நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த சட்டசபைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் நேற்று சர்பானந்த முதல்வராக பதவியேற்கும் விழா கவுகாத்திகனபாரா கால்நடை மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.  தற்போது நடந்து முடிந்த சட்டசபைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளான அசாம் கன பரிஷத் , போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவை வரலாற்று சாதனையை படைத்தது. 126 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளை கொண்ட அசாமில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 86 இடங்களில் வென்றது.  இதன் மூலம் காங்கிரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதனைத்தொடர்ந்து அசாமின் புதிய முதல்வராக பா.ஜ.க.வின்சர்பானந்த சோனோவால் பதவியேற்ற விழாவில் நேற்று பிரதமர் மோடி, மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் , மற்றும் பா.ஜ.கட்சி தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுக்கு 60 இடங்களும், அதன் கூட்டணி கட்சிகளான அசாம் கணபரிஷத் கட்சிக்கு 14 இடங்களும், போடோ மக்கள் முன்னணிக்கு 12 இடங்களும் கிடைத்தன. இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக அசாமில் நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது.  மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சர்பானந்த சோனோவால் அசாம் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மஜுலிலாக் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்றார். 

இந்நிலையில் தலைநகர் கவுகாத்தியில் உள்ள கனபாரா திறந்த வெளி திடலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சோனோவால் அசாமின் முதல் பாஜக முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் பி.பி.ஆச்சாரியா, சோனோவாலுக்கும் அவருடன் பதவியேற்ற அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சோனாவால் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது: அசாம் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இவர்கள் வளர்ச்சி குறித்து கனவு கண்டனர்.இதனால் சோனோவாலுக்கு ஒரு வாய்ப்பு அளித்துள்ளனர்.

இவர் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த தலைவர், மக்களுக்குச் சேவையாற்றுவதில் அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட சோனோவால் அசாம் முதல்வராகியுள்ளார். அசாம் மாநில முன்னேற்றத்துக்காக அவர் அனைத்தையும் செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மத்திய அரசு கூட்டுறவுக் கொள்கையுடைய கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டது, எனவே மாநிலங்களுக்கு நாங்கள் வலுவூட்டுவோம்.  ஜனநாயகம் என்பது பங்கேற்பு பற்றியது.

வளர்ச்சியில் மத்திய அரசும் மாநில அரசும் தோளுக்குத்தோள் இணைந்து செல்ல வேண்டும். இந்தியாவின் முன்னேற்றம் அனைத்து தரப்பாகவும், அனைவரையும் உள்ளடக்கியதுமாக இருக்க வேண்டும். வளர்ச்சிப் பயணத்தில் கிழக்குப் பகுதிகள் மட்டும் தனித்து விடப்பட முடியாதது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். அசாமில் 15ஆண்டுகளாக முதல்வராக இருந்து காங்கிரஸ் தலைவர் தருண்கோகய்யை தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வர வேண்டும் என்று சர்பானந்தா சோனோவால் அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்று 80வயது கோகய் பதவியேற்பு விழாவிற்கு வந்தார். அவர் பதவியேற்பு மேடையிலே அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.முதல்வர் பதவியேற்பு விழாவை  மாநிலத்தின் பல்வேறு நகர மக்களும் கிராம மக்களும்காணும் வகையில்  அங்கு வீடியோ திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. முதல்வர் பதவியேற்பு விழாவையொட்டி , விழா இடத்தில் துணை நிலை ராணுவத்தினர், மாநில போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதி முழுவதும் சி.சி.டி.வி காமிராவில் கண்காணிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago