முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

’ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் மேலும் 13 நகரங்கள் - வெங்கய்யா நாயுடு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஸ்மார்ட் சிட்டிமேம்பாட்டு  பட்டியலில் மேலும் 13 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அடுத்த வருடம் சட்டமன்றதேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னோ முக்கிய இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு மாநிலம் சார்பில் பரிந்துரைக்கப்படும் ஸ்மார்ட் சிட்டி களைதீர்மானிக்க மத்திய நகர்ப்புற அமைச்சகம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது அம் மாநிலத்தின் நகரங்களின் எண்ணிக்கை, அதன் மக்கள் தொகை, வளர்ச்சி மற்றும் புவிஇயல் சமத்துவம் ஆகியவற்றை பொறுத்து இறுதி முடிவு எடுத்து தேர்ந்தெடுத்து வருகிறது. இதற்கான போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்ட 23-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 நகரங்களின் பெயர் நேற்று காலை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் எம்.வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.

இதில், முதல் பெயராக உபியின் தலைநகரான லக்னோ இடம் பெற்றுள்ளது. இம் மாநிலத்தில் அடுத்த வருடம் துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் வாரங்கல்(தெலுங்கானா), தரம்சாலா (இமாச்சாலப் பிரதேசம்), சண்டிகர், ராய்பூர் (சத்தீஸ்கர்), நியூ டவுன் கொல்கத்தா, பாகல்பூர் (பிஹார்), பனாஜி (கோவா), போர்ட் பிளேயர் (அந்தமான் நிகோபாத்), இம்பால் (இம்பால்), ராஞ்சி (ஜார்கண்ட்), அகர்தாலா (திரிபுரா) மற்றும் பரீதாபாத் (ஹரியானா) ஆகியவையும்இடம் பெற்றுள்ளன.

ஸ்மார்ட் சிட்டி மூன்றாவது போட்டியில் பிஹாரின் பாட்னா, இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா, சத்தீஸ்கரின் புதிய ராய்பூர், அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகர், ஆந்திர பிரதேசத்தின அமராவதி, கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் ஆகிய தலைநகரங்கள் மற்ற நகரங்களுடன் இடம் பெற உள்ளதாகவும் அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சி மத்தியில் அமைந்தது முதல் அதற்கு முன் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிமுகப்படுத்திய திட்டங்களையே அமுல்படுத்துவதாக ஒரு புகார் நிலவி வருகிறது. இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் கடந்த வருடம் பிரதமர் மோடி துவக்கி வைத்த பா.ஜ.க.வின் கனவு திட்டமான ஸ்மார்ட் சிட்டிகள் திட்டம்  அமையும் எனக் கருதப்படுகிறது.

இதற்குமுன், ஜனவரியில் 20 நகரங்களைநகர்ப்புறவளர்ச்சித்துறை அறிவித்திருந்தது.’அடுத்த 10ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்ட மேம்பாட்டிற்கு ரூ 2லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்