முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியத்தில் ஒரு டன் வெங்காயத்தை 1 ரூபாய்க்கு விற்ற விவசாயி

புதன்கிழமை, 25 மே 2016      இந்தியா
Image Unavailable

புனே - மராட்டிய மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே பயிரிட்ட வேளாண் பயிர்கள் மூலம் கிடைக்கும் வருவாயிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது மராட்டிய மாநில விவசாயிகளை மேலும் பாதிப்படைய செய்துள்ளது. மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அங்கு வெங்காய அறுவடை நடந்து வருகிறது.

ஆனால் வெங்காயத்துக்கு விலை இல்லாததால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெங்காயம் பயிரிட பல்லாயிரக் கணக்கில் செலவழித்த விவசாயிகள் தற்போது அந்த தொகையை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். புனே மாவட்டத்தை சேர்ந்த தேவிதாஸ் என்பவர் 2 ஏக்கரில் வெங்காயம் பயிரிட்டிருந்தார். அதற்காக அவர் ரூ.80 ஆயிரம் செலவு செய்திருந்தார்.

கடந்த 10ம் தேதி அவர் தன் வயலில் விளைந்த வெங்காயத்தை 18 சாக்கு மூடைகளில் கொண்டு சென்று விற்பனை செய்தார். ஒரு கிலோ வெங்காயத்தை அவரால் ஒரு ரூபாய் 60 காசுக்கே விற்க முடிந்தது. அறுவடை கூலி, வாகன கூலி, வேலையாட்கள் சம்பளம், இடைத்தரகர்களுக்கான கமிஷன் போக தேவிதாஸ் கணக்கிட்ட போது, அவருக்கு ஒரு வெங்காய விற்பனைக்கு ஒரு ரூபாய்தான் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் இதே பரிதாப நிலையில்தான் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்