முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநில புதிய முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றார்

புதன்கிழமை, 25 மே 2016      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரள மாநில புதிய முதல்வராக இடது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பினராயி விஜயன் பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் உள்ள 19 அமைச்சர்களும் பதவிபிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

கடந்த 16ம்தேதியன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளில் 91 தொகுதிகளை இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி(எல்.டி.எப்.)கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கூட்டணியின் முதல்வராக இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் முதல்வராக நேற்று பொறுப்பேற்றார்.

அவருக்கு பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் நீதிபதி(ஓய்வு)  பி.சதாசிவம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழா  மாநில தலைநகர் திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.  முதல்வர் பினராயி விஜயன் கள் இறக்கும் ஏழைதொழிலாள குடும்பத்தை  சேர்ந்தவர். அவர் முதல் முறையாக கேரள மாநில முதல்வராக ஆகி உள்ளார். அவர் தனது பதவியேற்பு உறுதி மொழியை மலையாளத்தில் எடுத்துக்கொண்டார்.  அவர் கேரள மாநிலத்தின் 12வது முதல்வர் ஆவார்.

முதல்வர் உள்படஅமைச்சரவையில் உள்ள 19பேரில்   12பேர் இடது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இடது சாரி கூட்டணியில் உள்ள வலது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 4பேர், என்.சி.பி. ,மதச்சார்பற்ற ஜனதா தளம் ,மற்றும் காங்கிரஸ்(எஸ்) கட்சிகளை சேர்ந்த தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றார்கள்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசில் 21 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தார்கள். தற்போதைய அரசின் அமைச்சரவையில்  13 பேர் புதிய முகங்கள் ஆவார்கள். அவர்களில் இருவர் பெண்கள் ஆவார்கள். அமைச்சரவையில் உள்ள 5அமைச்சர்கள் முந்தைய எல்.டி.எப் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் . பதவியேற்பு விழாவிற்கு 30ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.  விழாவின் போது மழை தூறிய போதும் மக்கள் கூட்டம் கலையாமல் முதல்வர் பதவியேற்பு விழாவை கண்டு களித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்