முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு அலுவலகத்தில் எச்சில் துப்பினாலோ, பொது இடத்தில் சிறு நீர் கழித்தாலோ அபராதம்

புதன்கிழமை, 25 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - மத்திய அரசு அலுவலக வளாகத்தில் எச்சில் துப்பினாலோ, பொது இடத்தில் சிறு நீர் கழித்தாலோ அபராதம் விதிக்கப்படும் என்று  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுத்தமான பாரதம் , சுகாதாரமான பாரதம் என்ற திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.கட்டுமான இடத்தில் கழிவுகளை கொட்டுதல், கட்டுமான இடிபாடுகளை கொட்டும் ஒப்பந்ததாருக்கும் அபராதம் விதிக்கப்படும்.

மத்திய அரசின் இந்த உத்தரவு மத்திய அரசு அலுவலகங்களின் எல்லா அமைச்சரவைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய அரசு துறைகள் அவர்களின் அரசு அலுவலகங்களில் சுத்தமான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகளில் பழையவற்றை அகற்றவும், பதிவு செய்வதையும்  6மாதத்திற்கு ஒரு முறை மேற் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி சுத்தமான பாரதம் சுகாதாரமான பாரதம் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் படி வருகிற 2019ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதிக்குள்  நாடு முழுவதும் தூய்மைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்