முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 25 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவி்ப்பு வருமாறு:-
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி ஜூன் 11-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

1. ஆர்.வைத்திலிங்கம் ( தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் )
2. ஏ.நவநீதகிருஷ்ணன் ( அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர்)
3. ஏ.விஜயகுமார் ( கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் )
4. முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்  ஆகியோரை முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் சில வாரங்களுக்கு முன்பு தான் த.மா.கா வில் இருந்து விலகி அ.தி.மு.க வில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் இந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்