முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் மாநகர் மீது விரைவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் அமைப்பு திட்டம்

வியாழக்கிழமை, 26 மே 2016      உலகம்
Image Unavailable

லண்டன் - லண்டன் மாநகரின் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பிரச்சார தூதுவராக செயல்பட்டுவரும் இங்கிலாந்து நாட்டின்  சாலி ஜோன்ஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது., ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கண்டிப்பாக தான் லண்டன் நகருக்குள் செல்ல துணிவதில்லை எனவும், அதுவும் கண்டிப்பாக ரயில் சேவைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பேன் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அடுத்த பதிவில் லணடன் வெடித்துச் சிதறவுள்ளது என்பதை குறிக்கும் விதமாக பூம் எனவும் பதிவிட்டுள்ளார். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மீது கூட்டுப்படைகளின் தொடர் தாக்குதல்களை கேலி செய்துள்ள சாலி, ராணுவ நடவடிக்கைகளுக்கு பதில் உடனடியாக திருப்பி தரப்படும் என்றார். இதனிடையே, வெளியான ட்விட்டர் எச்சரிக்கை பதிவுகள் சாலி ஜோன்ஸ் என்பவரால் வெளியிடப்பட்டவை தானா என்ற சந்தேகத்தை புலனாய்வு குழு இயக்குனர் ரிதா கட்ஸ் உறுதி செய்துள்ளார். மேலும், ஈராக் நாட்டின் மோசூல்நகரில் இருந்து இந்த எச்சரிக்கை ட்விட்டர் பதிவுகள் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு சிரியாவின் ரக்கா நகரில்  வைத்து அமெரிக்க வான் தாக்குதலில் சாலி ஜோன்ஸ்ன் கணவர் கொல்லப்பட்டார். அதில் இருந்தே அவர் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க இருப்பதாக குறிப்பிட்டு வந்துள்ளார். தற்போது இவரது ட்விட்டர் பதிவுகளில் இங்கிலாந்தின்  லண்டன், கிளாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த இருப்பதாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்