முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கி கவர்னரை தனிப்பட்ட முறையில் தாக்குவதை ஏற்க முடியாது : சுப்பிரமணிய சாமி எதிர்ப்புக்கு ஜெட்லி பதிலடி

வியாழக்கிழமை, 26 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  நாட்டின் வளர்ச்சியை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சீர்குலைத்து விட்டார் என்று பா.ஜ.க தலைவரும் எம்.பியுமான சுப்பிரமணிய சாமி தனிப்பட்ட முறையில் தாக்கி விமர்சிப்பதை ஏற்க முடியாது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.  ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் உள்ளார்.

அவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகத்தின் பேராசியராகவும், சர்வதேச நிதியத்திலும் இருந்தவர். அவர்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு  நடந்த போது, ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.  அவர் கவர்னராக பதவியேற்ற பின்னர் வட்டி விகிதங்களை அதிகரித்தார். நாட்டின் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை மேற் கொண்டதாக வட்டி உயர் வின் போது ரகுராம் ராஜன் விளக்கம் அளித்திருந்தார்.  இந்த நிலையில் அவரது  3ஆண்டு பதவிக்காலம் முடிவடையவுள்ளது. 

அவரை மீண்டும் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்ககூடாது , அவர் பதவியேற்ற பின்னர்  இந்தியாவின் வளர்ச்சியை  சீர்குலைத்து விட்டார்.. அவர் இந்தியருக்கு உள்ள மனநிலையுடன் இல்லை.  அமெரிக்காவில் குடியேறுவதற்கா கிரீன் கார்டு பெற்று இருக்கிறார். இந்த கீரின் கார்டை ஆண்டு தோறும் அவர் புதுப்பித்து வருகிறார். அவரது நோக்கம் இந்தியாவின் வளர்ச்சியை பற்றியதல்ல. முந்தைய அரசில் நியமிக்கப்பட்ட ரகுராம் ராஜனை  உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.,ஜ.கவின் தலைவரும் ,ராஜ்ய சபாவின் எம்.பியுமான சுப்பிரமணிய சாமி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள ரகுராம் ராஜனை உடனடியாக நீக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி பல கடிதங்களை தனிப்பட்ட முறையில் எழுதியுள்ளார்.இந்தியாவின் மிக ரகசியமான நிதி விவரங்களை உலகம் முழுவதும் ரகுராம் ராஜன் அனுப்பி வருகிறார் என்றும் சுப்பிரமணிய சாமி விமர்சித்துள்ளார். இந்த நிலையில் பா.ஜ.கவின் தலைவரும் மத்திய நிதியமைச்சருமான அருண்ஜெட்லி சுப்பிரமணிய சாமியின் தனிப்பட்ட முறையிலான தாக்குதலை ஏற்க முடியாது என்று பதிலடி தந்துள்ளார்.  இதுகுறித்து ஜெட்லி நேற்று டெல்லியில் கூறியிருப்பதாவது,

 ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் ரகுராம் ராஜனை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. ரிசர்வ் வங்கி நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த தன்னாட்சி முடிவை எடுக்கும் அமைப்பாகும். அவர்களது முடிவில் நாம் விருப்பமோ அல்லது அதிருப்தியோ மேற்கொள்வது ஒருவரின் தனிப்பபட்ட முடிவை  சார்ந்தது. ஆனால் அந்த விவகாரம் பொது இடத்தில் விவாதமாக மாறுவதை நாம் அனுமதிக்க கூடாது. ரிசர்வ் வங்கியும், அரசும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

அந்த உறவு தொடர வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் நிதி கொள்கை கமிட்டி கூடும் போது, வங்கியும் அரசு நியமன நபர்களும் கூடி நிதிக்கொள்கை குறித்து முடிவு செய்வார்கள்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வருகிற செப்டம்பர் மாதம் முடிவடைகிறது. அவரது பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அவரை மீண்டும் அந்த பதவியில் நியமிக்க கூடாது என சுப்பிரமணிய சாமி கூறிவருகிறார். இந்த நிலையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி  சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்