முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூத்தக்குடிமக்களுக்கு இலவச பஸ்பாஸ்: போக்குவரத்துக்கழகம் முக்கிய அறிவிப்பு

வியாழக்கிழமை, 26 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலவச பஸ் பாஸ் திட்டத்தில் பயன்பெற மூத்த குடிமக்கள் புகைப்பட அடையாள அட்டை, குடும்ப அட்டை நகலை கொடுத்து டோக்கன்களை பெறலாம் என்று மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது

இது குறித்து மாநகர் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 24 ம்தேதி சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட சென்னை பெருநகர் வாழ் மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் புகைப்பட அடையாள அட்டை, மற்றும் பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே மாதங்களுக்கான கட்டணமில்லா பயணத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டது. தற்போ4து ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் கட்டணமில்லா பயணத்திற்கான டோக்கன்களை பெற்றவர்களுக்கு எதிர்வரும் ஜூன் ,ஜூலை, ஆகஸ்ட், ஆகிய மூன்று மாதங்களுக்கு தலா 10 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மூத்த குடிமக்கள் கீழ்க்காணும் ஆவணங்களை தந்து ஏற்கனவே அடையாள அட்டை மற்றும் கட்டணமில்லா டோக்கன்களை பெற்ற மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். 1, குடும்ப அட்டை நகல்,. 2 புகைப்பட அடையாள அட்டை, இதற்காக மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது இந்த கட்டணமில்லா டோக்கன்களை சம்பந்தப்பட்ட மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மூத்த குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மூத்த குடிமக்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து குடும்ப அட்டையுடன் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்தின் அருகாமையில் உள்ள மாநகர் போக்குவரத்து கிளை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.என சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத நிர்வாகம் சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.   இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்