முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி : இலக்கை துல்லியமாக தாக்கியது

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர்  -  இந்திய விமானப்படைஅதி நவீ னதொழில்நுட்பம் கொண்ட பிரமோஸ் ஏவுகணையை வெற்றி கரமாக பரிசோதனை செய்தது. அந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது. பாலைவனப்பகுதியான ராஜஸ்தானின் மேற்கு பகுதியில்  அதி நவீன வடிவமைப்பு கொண்ட பிரமோஸ் ஏவுகணை நேற்று வெற்றி கரமாக பரிசோதனை செய்யப்பட்டது.  அந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியதன் மூலம் அந்த ஆயுதம் தனது திறனை உணர்த்தியது. 

ஒலியின் வேகத்தை விட அதி வேகமாக பாய்ந்து செல்லும் சூப்பர் சோனிக் ஏவுகணையான பிரமோஸ்  உலகிலேயே தலைச்சிறந்த ஏவுகணையாக திகழ்கிறது என்று பிரமோஸ் விண்வெளி திட்ட இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுதிர்  மிஸ்ரா தெரிவித்தார்.மேலும் அவர் இந்திய விமானப்படையினரையும் பாராட்டினார். பாதுகாப்பு ஆராய்க்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின்(டி.ஆர்.டி.ஓ) தலைவர் கிறிஸ்டோபர் பிரமோஸ் ஏவுகணை இலக்கை துல்லியமாகவும் முழுமையாகவும் அழித்தது  குறித்து பிரமோஸ் நிபுணர்கள் குழுவினருக்கும், டி.ஆர்.டி.ஓ  விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்