முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா பதவியேற்பு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது செல்போனில் பேசிய பரூக் அப்துல்லா செயலால் சர்ச்சை

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா  - மேற்குவங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றுக் கொண்ட விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பரூக் அப்துல்லா செல்போனில் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப்பெற்று திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்தது. இதன் மூலம் 2-வது முறையாக அம்மாநில முதல்வராக மம்தா பானர்ஜி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு விழாவில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவும் கலந்துக்கொண்டனர்.  பதவியேற்ப்பு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் காஷ்மீர் முதல்வருமான பரூக் அப்துல்லா செல்போனில் பேசியக் கொண்டிருந்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது பரவி வருகிறது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பரூக் அப்துல்லாவின் இந்த செயலை கண்டித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்