முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் யானை மதுரவள்ளி மரணம் அடைந்தது

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை  - மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் யானை மதுரவள்ளி உடல் நலக்குறைவால் தனது 53 வயதில் மரணம் அடைந்தது. பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் பெண்யானை மதுரவள்ளி (வயது) 53. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலில் அடிப்பட்டு புண் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மதுரவள்ளி நோய்வாய் பட்டது.

இதனால் டாக்டர்கள் மதுரவள்ளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் தான் ஊட்டியில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமிற்கு கூட மதுரவள்ளி அழைத்து செல்லப்படவில்லை. தொடர் சிகிச்சை அளித்தும் கடந்த சில நாட்களாக மதுரவள்ளிக்கு நோய் முற்றியது. இதனால் டாக்டர்கள் தீவிர பராமரிப்பில் இருந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் யானை மதுரவள்ளி  பரிதாபமாக மரணம் அடைந்தது. 

 இது பற்றி தகவல் அறிந்ததும் இந்து அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் பச்சையப்பன், கூடலழகர் கோவில் அதிகாரி அனிதா, மற்றும் கோவில் பட்டர்கள், பக்தர்கள் மதுரவள்ளிக்கு மாலை மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஆண்டாள்புரம் அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான நந்தவனத்திற்கு மதுரவள்ளி யானையின் உடல் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது பக்தர்ள் மதுரவள்ளிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மதுரவள்ளி மரணத்தையொட்டி கூடலழகர் பெருமாள் கோவிலின் நடைசாத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago