முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்க முதல்வராக 2-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்றார்

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      இந்தியா
Image Unavailable


கொல்கத்தா  -மேற்குவங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி நேற்று 2-வது முறையாக பதவியேற்றார்.  294 இடங்களை கொண்ட மேற்குவங்க சட்டசபைக்கு ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி மே 5-ம் தேதிவரை 6 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இடதுசாரி கட்சிகளும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆட்சியைப் பிடிக்கும் உத்வேகத்துடன் பாரதீய ஜனதாவும் தீவிரமாக களம் இறங்கியது.

சாரதா சீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் சவாலாக அமைந்தபோதும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை தக்க வைக்கும் என கூறின. வாக்கு எண்ணிக்கையில் எதிர்பார்த்தது போலவே திரிணமுல் காங்கிரஸ் கட்சி 211 இடங்களில் அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இடதுசாரிகள், காங்கிரஸ்(44) கூட்டணி 77 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆட்சிக்கனவில் களமிறங்கிய பாரதீய ஜனதா கட்சிக்கு 3 இடங்களே கிடைத்து. கொல்கத்தாவில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

கொல்கத்தாவில் நேற்று நடைபெறும் நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி 2-வது முறையாக மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் கே.என்.திரிபாதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். மம்தாவை தொடர்ந்து 41 அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர். மம்தாவின் பதவியேற்பு விழாவில் நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவும் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago