முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்ட நுணுக்கத்தில் சமரசம் செய்யாமல் விராட் கோலி ஆடுகிறார் : டெண்டுல்கர் புகழாரம்

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      விளையாட்டு
Image Unavailable

துபாய்  - ஆட்ட நுணுக்கத்தில் சமரசம் செய்யாமல் விராட் கோலி ஆடுகிறார் என்று நட்சத்திர கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர்  அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். துபாயில் இருந்து கல்ப் நியூஸ் என்ற ஆங்கில நாளிதழ் வெளியாகிறது. அந்த நாளிதழுக்கு இந்திய கிரிக்கெட்டில் சாதனை பேட்ஸ்மேனாக திகழ்ந்த டெண்டுல்கர் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,  தற்போது நம்பர் ஓன் பேட்ஸ்மேனாக இந்திய வீரர்  விராட் கோலி இருக்கிறார். அவர் தனது பேட்டை நேராக பிடித்து நல்ல ஷாட்டுகளை அடிக்கிறார். அவருக்கு சிறப்பு நிபுணத்துவம் இருக்கிறது. அவர் போட்டியின் போது கடின உழைப்பை அளிக்கிறார். அவரது கட்டுப்பாடு, கடமையுணர்வு அவரை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அவர் பல்வேறு முறைகளை தனது ஆட்ட நுணுக்கத்தை சமரசம் செய்து கொள்ளாமல் செய்து பார்க்கிறார். அவர் மன ரீதியாக வலிமைமிக்கவராக இருக்கிறார். இதனால் நெருக்கடியான நேரத்திலும் அற்புதமாக ஆடி ரன்களை குவிக்கிறார்.  இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் தரமிக்கதாக உள்ளது. இதற்கு அனைத்து வீரர்களுமே காரணம்.ஐ.பி.எல் போட்டியில் ஆடும் அணிகளின் உறுதியுடன் போராடும் நிலை அதிகரித்து வருகிறது. டி20போட்டியின் போது,சிக்சர்களையும், பவுன்டரிகளையும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிக்குகென்று ஒரு தனித்துவம் உள்ளது. டெஸ்ட் போட்டிகள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கின்றன.  இதர முறைகளில் ஆடப்படும் போட்டிகள் பேட்ஸ்மென்களுக்கு சாதகமானதாக இருக்கின்றன. டெஸ்ட் போட்டியை ஆர்வம் தரக்கூடியதாக அதன் நடைமுறைகளை மாற்றி  அமைக்கலாம். எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் போட்டி, எப்போதும் சவாலாகவே இருக்கும்.  வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் களமாக டெஸ்ட் போட்டி உள்ளது. அலி ஸ்டைர் குக் 10ஆயிரம் ரன்களை எட்டுகிறார். அவரது கடுமையான  பயிற்சியும், கட்டுப்பாடும்தான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்