முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஸ்புக்கில் நேருவை புகழ்ந்து பேசிய அரசு அதிகாரியை இட மாற்றம் செய்தது மத்திய பிரதேச அரசு

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      இந்தியா
Image Unavailable

போபால் - மத்தியபிரதேச மாநிலம் பர்வானி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர், அஜய்சிங் காங்வார். இவர், மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குறித்து அண்மையில் முகநூலில் மறைமுகமாக புகழ்ந்து எழுதி இருந்தார்.  அதில், ஜவகர்லால் நேரு என்ன தவறு செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. 1947-ல் நாடு சுதந்திரம் பெற்றபோது நம்மை, இந்து தலிபான் அரசாக மாறாமல் தடுத்தது அவர் செய்த தவறா? ஐ.ஐ.டி, இஸ்ரோ, ஐ.ஐ.எம், பெல், பார்க், ஐ.ஐ.எஸ்.பி. போன்ற நிறுவனங்களை உருவாக்கியது, அணைகள் கட்டியது, நீர்மின் திட்டங்கள் தீட்டியது அவர் செய்த தவறா?... விக்ரம் சாராபாய், ஹோமி ஜெகாங்கிர் போன்ற சிந்தனையாளர்களை கவுரவித்தது தவறா? என்று கூறி இருந்தார்.

அவருடைய இந்த கருத்து மற்ற சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவியது. இந்த நிலையில் நேற்று  இரவு அஜய்சிங் காங்வாரை மாவட்ட கலெக்டர் பதவியில் இருந்து அதிரடியாக மாற்றிய மத்தியபிரதேச மாநில அரசு அவரை போபாலில் உள்ள மாநில தலைமைச் செயலக துணை செயலாளராக நியமித்தது. பேஸ்புக்கில் வைரலாக தனது பதிவு பரவியதையடுத்து, அஜய்சிங் , பதிவை நீக்கினார். அரசு அதிகாரிகள் அரசியல் ஈடுபாடு கொண்ட கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கூடாது என்ற அடிப்படை விதியை மீறியதால், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளும் பாரதீய ஜனதா அரசு தெரிவித்துள்ளது.  இதற்கிடையே, காங்கிரசின் பலமான தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரருக்கு எதிராக ஆளும் பாரதீய ஜனதா அரசு தனது சகிப்பின்மையை நிரூபித்துள்ளது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்