முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு :இறப்பதற்கு முன்னர் மன உறுதியுடன் 4 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற ஜவான் !

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      இந்தியா
Image Unavailable

ஶ்ரீநகர்  - ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுடனான சண்டையின் போது இறப்பதற்கு முன்னர், பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவிய 4 தீவிரவாதிகளை இந்திய ஜவான் சுட்டுக்கொன்றார். ஜம்மு-காஷ்மீர்  மாநிலத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் ஹவில்தார்  ஹங்பன் தாதா ஈடுபட்டிருந்தார். அவர் நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகள் அந்த பகுதியில் இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக அவர் அந்த தீவிரவாதிகளை கொல்வதற்கு என்கவுன்ட்டரில் ஈடுபட்டார். அப்போது அந்த தீவிரவாதிகள் தங்கள் கைகளில் இருந்த துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் ஜவான் தாதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அந்த நிலையிலும், அவர் மன உறுதியுடன்  தீவிரவாதிகளை கொல்வதற்கு சுட்டார். அவரது துப்பாக்கிச் சூட்டினை எதிர்கொள்ள முடியாமல் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜவான் கடந்த ஆண்டுகளாக இந்த உயரமான மலைப்பகுதி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அவர் கடந்த 1997-ம் ஆண்டு, 35 ராஷ்ட்ரிய ரைபிள் படைப்பிரிவில் சேர்ந்தார். அந்த படை பிரிவில்  உள்நாட்டு கலவரங்களை ஒடுக்கும் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

அந்த பிரிவில் ஜவான்  தாதா இடம் பெற்றார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் மிக உயரமான இடத்தில் இருந்து இந்திய எல்லைக்குள் வரமுயன்றனர். அப்போதுதான் ஜவான்  தாதா மன உறுதியுடன் தீவிரவாதிகளை எதிர் கொண்டார். இதில் இரு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 3-வது  தீவிரவாதி மோதலின் போது சறுக்கி விழுந்த நிலையில் நேற்று இறந்தார். 4-வது தீவிரவாதி இந்திய வீரர்களிடம் பிடிபடாமல் இருக்க தன் கையில் இருந்த துப்பாக்கியாலேயே சுட்டுக்கொண்டு நேற்று இறந்தார். இந்த 4 தீவிரவாதிகள் மரணத்திற்கும் காரணமாக இருந்த ஜவான் தாதாவும் படுகாயம் அடைந்ததால் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.

மன உறுதியுடன் இறக்கும் போதும் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்  தாதா உடல் அவரது சொந்த கிராமத்திற்கு, இறுதி சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. மரணம் அடைந்த ஜவான் ஹபன் தாதாவிற்கு  சாசன் லோவங் என்ற மனைவியும் மகள் ருகின் என்ற மகளும் உள்ளனர் அந்த மகளுக்கு வருகிற  ஜூன் மாதம் 30-ம் தேதியன்று 10-வது பிறந்த நாள் ஆகும். அந்த வீரருக்கு 6வயதில் சென்வாங் என்ற மகனும் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்