முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா உத்தரவுப்படி வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி நன்றி

சனிக்கிழமை, 28 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.ஆங்காங்கே மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்கள்.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து தொகுதி முழுவதும் தொண்டர்களுடன் சென்று மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்தார்கள்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்.கடந்த 23–ந்தேதி அன்று 6–வது முறையாக முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.
32 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சி அமைத்த வரலாற்று சாதனையை படைத்தார் ஜெயலலிதா. 6–வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்ற சாதனையையும் படைத்தார்.

ஜெயலலிதா மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக அவரிடம் ஆட்சியை வழங்கி இருக்கிறார்கள். இது அவர் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள்– சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.

கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை கடந்த 5 ஆண்டு காலத்தில் ஜெயலலிதா நிறைவேற்றினார். மக்கள் மனநிறைவு மகிழ்ச்சி அடைந்தனர்.இதேபோன்று 2016 சட்டமன்ற தேர்தலிலும் ஏராளமான வாக்குறுதிகளை ஜெயலலிதா வழங்கியிருக்கிறார்.23–ந்தேதி அன்று பதவி ஏற்றவுடன் சென்னை கோட்டைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றார்.முதல் நாளிலேயே 5 முக்கிய கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.தேர்தலின்போது அளித்த வாக்குறுதிபடி அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 மதுக்கடைகள் மூடல், மதுக்கடைகளை திறக்கும் நேரத்தை காலை 10 மணியிலிருந்து 12 மணியாக மாற்றம், நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 200 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு  750 யூனிட் இலவச மின்சாரம், தாலிக்கு 8 கிராம் தங்கம், ரூ.5,780 கோடி விவசாயகள் பயிர் கடன் தள்ளுபடி செய்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.பதவி ஏற்ற முதல் நாளிலேயே 5 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்ததால் தமிழகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.ஜெயலலிதா ஆட்சி அமைந்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.அ தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வாக்களித்த மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா  பேட்டி மூலமும், அறிக்கைகள் மூலமும் நன்றி தெரிவித்தார்.தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஒவ்வொரு அண்ணா தி.மு.க. வேட்பாளரும்  வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரும்,  அ தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இது குறித்து ஜெயலலிதா  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்  தேர்தலில் வியத்தகு வெற்றியை தமிழக மக்கள் அண்ணா தி.மு.க.விற்கு வழங்கி  உள்ளனர்.‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற கொள்கையை  வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் உங்கள் அன்புச்  சகோதரியாகிய எனக்கு, நீங்கள் வழங்கி வரும் இணையில்லா அன்பிற்கும்,  பேராதரவிற்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. தமிழக மக்கள் எனது தலைமையிலான அண்ணா தி.மு.க.விற்கு வழங்கி  இருக்கும் இந்த மகத்தான வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் மீண்டும் எனது  நன்றி உரித்தாகுக.

அ தி.மு.க. வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் போட்டியிட்ட  ஒவ்வொருவரும் வாக்காளர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். வெற்றி  பெற்ற வேட்பாளர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும், தத்தமது சட்டமன்றத்  தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி வாக்காளர்களையும் நேரில் சந்தித்து  நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அளித்ததைப் போல, தொடர்  வெற்றியை எனக்கும் அளித்திருக்கும் மக்களுக்கு, கடந்த காலங்களைப் போல எனது  தலைமையிலான புதிய அரசு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும் என்ற  உறுதிமொழியையும் இத்தருணத்தில் தெரிவித்து மகிழ்கிறேன்.   இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும், வெற்றிவாய்ப்பை இழந்தவர்களும் வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்தார்கள்.முன்னதாக அந்த பகுதியில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து வீதி வீதியாக சென்று மக்களுக்கு இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தார்கள்.பதவி ஏற்றதும் முதலமைச்சர் ஜெயலலிதா 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றியதையும் மக்களிடம் எடுத்து சொன்னார்கள்.

அமைச்சர் பா. பென்ஜமின்

அதிமுக மதுரவாயல் தொகுதி  சட்டமன்ற  வெற்றி வேட்பாளாரும் அமைச்சருமான்  பா. பென்ஜமின் 92 வது வார்டு உட்பட்டஅனைத்து பகுதிகளிலும்   பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார் உடன்  கா.சு.ஜனார்த்தனம் , கே.கபாலி, துண்டலம் பாபு, ராமாபுரம் சேகர்,  தொகுதி செயலாளர் ஜீவானந்தம் எம்.சி, லக்கிமுருகன், பாரத் எம்சி , தேவதாஸ் எம்சி , மற்றும் தென்றல் குமார்,  ராஜன் , பிரபு ஜோயல்  பலர் கலந்து கொண்டனர்

பா.வளர்மதி

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த  முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி இன்று தொகுதியில்  வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். 109, 110, 112 ஆகிய  வார்டுகளில்     அவர் வீதி வீதியாக சென்றார். பாரதீஸ்வரர் காலனி, ஈஸ்வர் காலனி, சிவன் கோவில் தெரு, டிரஸ்ட்புரம், வரதராஜபேட்டை, சுபேதார் கார்டன், சூளைமேடு சாலை, பஜனை கோவில் தெரு, அப்துல்லா தெரு, அப்பாசாமி தெரு உட்பட பல்வேறு தெருக்களில் சென்று வாக்காளர்களுக்கு பா.வளர்மதி நன்றி தெரிவித்தார். அவருடன் ஆயிரம்விளக்கு பகுதி செயலாளர் நுங்கை மாறன் எம்.சி., நடிகர் ஜெயகோவிந்தன், புஷ்பாநகர் ஆறுமுகம் எம்.சி., மாவட்ட குழு தலைவர் எஸ்.சக்தி, ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் வழக்கறிஞர் ஆர்.சதாசிவம், நுங்கை மூர்த்தி, பொன் செ.குமார், வரதை முத்துபரணி, எம்.சேகர், பி.ராமமூர்த்தி, நுங்கை விவேக்,  பிகாலனி எழில், முனிஸ், மன்சூர் அகமது, என்.எஸ்.மணி, ராஜு, ஐயப்பன், அன்சர் உட்பட ஏராளமானபேர்   உடன் சென்றார்கள்.இதுபோன்று ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றவர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்