முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர்கள் பதவிகளுக்கான தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தேர்வு தேதிகள் அறிவிப்பு

சனிக்கிழமை, 28 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர் உட்பட பல காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரையாளர், இளநிலை உதவியாளர், வேதியியல் பரிசோதகர், களப்பணியாளர், சுருக்கெழுத்தர் பல காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அண்ணா பல்கலை கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்த தேர்வுகள் கடந்த 22-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரையாளர் ஆகிய பணி இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதியும், இளநிலை உதவியாளர், வேதியியல் பரிசோதகர், களப்பணி உதவியாளர் (பயிற்சி) சுருக்கெழுத்தர் ஆகிய பணி இடங்களுக்கு ஆகஸ்ட் 17-ந்தேதியும், இளநிலை உதவியாளர் (நிர்வாகம்), தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல், இயந்திரவியல்) ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 28-ந்தேதியும் தேர்வு நடைபெறுகிறது.குறிப்பிட்ட 6 பதவிகளுக்கு 31 மையங்களில் நடைபெறுவதாக இருந்த தேர்வு 8 மையங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மையங்கள் குறித்த விவரங்கள் தேர்வுக்கான கால அட்டவணை ஆகியவற்றை www.tangedco.gov.in, tangedco.directrecruitment.in  ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்