முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் யார்? எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து பேசி முடிவு - முகுல்வாஸ்னிக்

சனிக்கிழமை, 28 மே 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரை எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து பேசி தேர்வு செய்வோம் என்று முகுல்வாஸ்னிக் அளித்த பேட்டியில் கூறினார்.

சட்டசபை தேர்தலில் 40 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றது.சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகிறது.சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது . இதில் காங்கிரஸ் மேலிட பிரதிநிதியும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரியுமான ஷீலா தீட்சித், கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகில் வாஸ்னிக் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.இதற்காக சென்னை வந்த முகில் வாஸ்னிக் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுக்க என்னையும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளார். முதலில் நாங்கள் பாண்டிச்சேரி செல்கிறோம்.பின்னர் சென்னை வந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து பேசி தலைவரை தேர்வு செய்வோம். 3 மாநில எம்.எல்.ஏ.க்களை சந்திக்க உள்ளோம். எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து பேசி தலைவரை தேர்வு செய்வோம்.காங்கிரஸ் கட்சியின் வெற்றி-தோல்வி குறித்தும் ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்