முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள தேர்தலில் கம்யூனிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த அ.தி.மு.க தொண்டர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் நிதி உதவி

சனிக்கிழமை, 28 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - கேரள சட்டமன்றத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதலில் உயிரிழந்த அ.தி.மு.க தொண்டர் சுந்தரம் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் குடும்ப நலநிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  இது குறித்து முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு., கேரள மாநிலம் உடும்பன் சோழா சட்டமன்றத்தொகுதி, மஞ்சப்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க உடன்பிறப்பு சுந்தரம் என்பவரை கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் முன்விரோதத்தில் கடுமையாக தாக்கி படுகாயப்படுத்தியதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைகிறேன்.

இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  அன்புச்சகோதரர் சுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நலநிதியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்