முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடுமையான வறட்சி சூழலில் மகாராஷ்டிராவில் தண்ணீரை வீணாக்கியது குறித்து முதல்வர் மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 28 மே 2016      இந்தியா
Image Unavailable

மும்பை  - கடுமையான வறட்சி சூழலில் மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வருகைக்காக அமராவதி நகரில் உள்ள சாலை ஒன்றை தூய்மை செய்வதற்காக தண்ணீரை வீணாக்கியது குறித்து எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அந்த மாநிலத்தின் மேலவை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்ஜெய் கூறும்பொழுது, முதல்வர் நிகழ்ச்சிக்காக இர்வின் சவுக் மற்றும் பஞ்ச்வாடி சவுக் பகுதிகளுக்கு இடையிலான சாலை சுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த மாவட்டம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை போன்று தண்ணீர் பற்றாக்குறை நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தண்ணீரை வீண் செய்ததை தவிர்த்து இருக்கலாம்.  இந்த தண்ணீர் வீண் செய்யப்பட்ட விவகாரம் குறித்து முதல்வர் பட்னாவிஸ் தெளிவுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில் தேசியவாத காங்கிரசின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறும்பொழுது, தண்ணீரை வீணாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார். 

அதனுடன், மாநில வருவாய் துறை அமைச்சர் ஏக்நாத் கட்சேவின் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக ஹெலிபேடு ஒன்றை உருவாக்க தண்ணீர் வீண் செய்யப்பட்டதையும் நவாப் குறிப்பிட்டார்.கடும் தண்ணீர் நெருக்கடியில் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகள் உள்ள நிலையில், லத்தூரில் வறட்சி சூழ்நிலையை மறு ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் ஹெலிகாப்டரில் வந்த கட்சே இறங்குவதற்காக ஒரு கிராமத்தில் ஹெலிபேடு ஒன்றினை உருவாக்குவதற்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்