முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பிரதமர் அலுவலக இணைய சேவை தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தமிழ், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்க மொழி, மராத்தி ஆகிய 6 பிராந்திய மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுடன் தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் பிரதமர் அலுவலக இணையதள சேவையை முக்கிய பிராந்திய மொழிகளிலும் வழங்க அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி தமிழ், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்க மொழி, மராத்தி ஆகிய 6 பிராந்திய மொழிகளின் சேவை தொடங்கப்பட்டது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புதிய சேவைகளை தொடங்கிவைத்தார்.

இதற்கு முன்பு www.pmindia.gov.in என்ற பிரதமர் அலுவலக இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் இடம்பெற்றன. இனிமேல் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் பிரதமர் அலுவலக செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.
இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''பிராந்திய மொழி சேவையால் மக்களுடனான எனது உறவு வலுப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களின் கருத்துகள், எண்ணங்கள், சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago