முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் பறவை காய்ச்சலால் 2லட்சம் கோழிகள் சாவு - தமிழக எல்லைகளில் கண்காணிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகத்தில் பறவைக்காய்ச்சலால் 2லட்சம் கோழிகள் இறந்துள்ளன. ,இந்த நோய் பரவாமல் இருக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத் கிராமத்தில் ரமேஷ் குப்தா என்பவரது கோழிப்பண்ணையில் கடந்த மாதம் நோய் தொற்று ஏற்பட்டு 8ஆயிரம் கோழிகள் இறந்தன. கடந்த 3ம்தேதியன்று 23ஆயிரம் கோழிகள் இறந்தன.

இது பற்றி ரமேஷ் குப்தா கர்நாடக மாநில கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல்தெரிவித்தார். அவர்கள் கோழிப்பண்ணையை பார்வையிட்டார்கள். இறந்த கோழிகளின் மாதிரிகளையும் அவர்கள் போபாலில் உள்ள கால் நடை ஆய்வு மையத்திற்கும் சோதனைக்கு அனுப்பினார்கள். அந்த பரிசோதனையில் பறவைக்காய்ச்சலால் கோழிகள் இறந்திருப்பது தெரிய வந்தது.

கர்நாடக மாநில கால் நடைத்துறை அமைச்சர் மஞ்சு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று பறவைக்காய்ச்சல் பாதித்த பண்ணையை பார்வையிட்டார்கள். அப்போது அங்குள்ள ஒன்றரை லட்சம் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சலை உண்டாக்கும் எச்.5 என்1 வைரஸ் தாக்கி இருப்பது தெரிய வந்தது.

பறவைக்காய்ச்சல் பிற இடங்களுக்கு பரவாத வகையில், அதிகாரிகள் பார்த்துக்கொண்டார்கள். முதல் கட்டமாக அவர்கள்  பறவை காய்ச்சல் பாதித்த ஒன்றரை லட்சம் கோழிகளை ஆழமாக தோண்டி புதைத்தார்கள். அங்கிருந்த 1லட்சம் முட்டைகளையும் புதைத்தனர்.

கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 2லட்சம் கோழிகள் இறந்துள்ளன. இதனால் ரூ6.5கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில பறவைக்காய்ச்சல் பாதிப்பை தொடர்ந்து, தமிழகம், கேரள தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் கோழிகள் எல்லைப்பகுதியில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்