முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீன்பிடித்தடை காலம் நிறைவடைந்தது கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : மீன் இனப்பெருக்கத்திற்காக, தமிழக கடல்பகுதியில் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடைக்காலம்  நேற்றுடன்  முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும், கடல்வளத்தை பாதுகாக்கவும், தமிழக கடல்பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் மே மாதம் 29-ம் தேதி வரை, விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த மீன்பிடி தடைக்காலத்தில், விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். மீன்பிடி தடைக்காலம் நேற்று முடிவடைவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். தங்களின் படகுகளை பழுதுபார்த்து வண்ணம்தீட்டி, வலைகளை சரிசெய்து தயார்படுத்தி மீண்டும் கடலுக்குச் செல்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மீன்பிடித் தடைக்காலத்தில் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது. உரிய நேரத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த நிதி பேருதவியாக இருந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீனவ சமுதாயத்தினர் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்