முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு தவறான பாதையில் செல்வதை அனுமதிக்க மாட்டேன் - பிரதமர் மோடி உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      இந்தியா
Image Unavailable

தாவன்கரே(கர்நாடகம்) : நாடு தவறான பாதையில் செல்வதை அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி கர்நாடகத்தில் பங்கேற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணி அரசு மத்தியில் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 2ஆண்டுகளில் பாஜ.க தலைமையிலான மத்திய அரசு செய்துள்ள சாதனை விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று தாவன்கரேவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது,

பாவத்தின் பாதையில் நான் ஒருபோதும் செல்ல மாட்டேன். முந்தைய அரசு சில நபர்களுக்காக மட்டும் சாதகமாக நடந்து கொண்டது.நான் அத்தகைய பாவங்களை செய்ய மாட்டேன். எனது அரசு திட்டங்கள் விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் பயன் அடைவதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்கள் அரசில் இடைத்தரகர்களுக்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது.எனது அரசு பதவியேற்று ஒருவாரம் ஆகியிருக்காத நிலையில் சில நபர்கள் எனது அரசு பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். இந்த நாட்டில் சில மக்கள் ஜனநாயகத்தை பேசுகிறார்கள்.  ஆனால் அவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை நம்புவது கிடையாது.  அவர்கள் என்.டி.ஏ கூட்டணி அரசு ஏற்பட்டதை ஜீரணிக்க முடியாமல் இருக்கிறார்கள். நான் எங்கிருந்து வந்தேன் என்று ஆச்சரியப்படுகிறார்கள்.  நான் இந்த பூமியில் இருந்துதான் வந்துள்ளேன். நான் உங்களில் ஒருவன். கடந்த 2ஆண்டுகளில் நான் செய்த பணிகள் மக்களின் நலன்களுக்காகவே செய்யப்பட்டுள்ளன. ஆனால் சில மக்கள் மோடி பெரிய விஷயங்கள் எதையும் செய்யவில்லை என சொல்கிறார்கள்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு சில மக்களின் நலன்களுக்காக மட்டும் செயல்பட்டது. நான் அது போன்ற பாவம் செய்ய மாட்டேன். உங்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் . ஒன்றிரண்டு விஷயங்களை நான் செய்யாமல் இருந்தாலும், நாடு தவறான பாதையில் செல்வதை அனுமதிக்க மாட்டேன்.

நமது இந்தியாவை புதிய நிலைக்கு கொண்டு செல்வதே எனது அரசின் நோக்கமாக இருக்கிறது.விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, பாசன வசதி திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளோம். அடுத்த 3ஆண்டுகளில் 5கோடிஏழை மக்களுக்கு சமையல் எரி வாயு சிலிண்டர்களை வழங்குகிறோம்.கரும்பு விவசாயிகளுக்கு முன்கூட்டியே சர்க்கரை ஆலைகள் நிலுவைத்தொகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆன்லைனில் விவசாயிகள்  தங்களதுவிளை பொருட்களை நல்ல விலையில் விற்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்