முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றார்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      இந்தியா
Image Unavailable

சென்னை : புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அந்தமான் கவர்னராக இருந்து வந்த அஜய்குமார் சிங், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடியை மத்திய அரசு நியமித்தது. இதைத் தொடர்ந்து அவர் சனிக்கிழமை இரவு புதுச்சேரி ஆளுநர் மாளிக்கைக்கு வந்தார். அவருக்கு முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமி, தலைமை செயலர் மனோஜ் பரிதா, ஐஜி பிரவீர் ரஞ்சன் ஆகியோர் வரவேற்பு அளித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரியில் நேற்று மாலை நடைப்பெற்ற பதிவியேற்பு விழாவில், துணைநிலை ஆளுநராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இன்று (நேற்று) பதவி ஏற்க உள்ளேன். புதுச்சேரி மாநிலத்தில் கல்வி, சுகாதாரம், மீன்வளம், சுற்றுலா, விவசாயம், தொழில்துறை, பெண்கள் நலன், கிராமபுற வளர்ச்சி, பொருளாதாரம் உள்பட அனைத்து துறைகளையும் மேம்படுத்தி புதுச்சேரியை வளமான மாநிலமாக மாற்ற பாடுபடுவேன் என்று கூறினார்.

நேற்று பதவியேற்புக்கு முன்னரே கிரண்பேடி தலைமைச் செயலகத்தில் அரசுத்துறை செயலர்கள், இயக்குனர்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இதில் தலைமைச் செயலர் மனோஜ் பரிதா மற்றும் அரசு செயலர்கள், ஜஜி பிரவீர் ரஞ்சன், துறைகளின் இயக்குனர்கள், தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அரசு துறைகள், அவற்றின் செயல்பாடுகள், காவல்துறையின் செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு நிலைமை உட்பட முக்கிய விவரங்கள் அனைத்தையும் கிரண்பேடி கேட்டறிந்ததாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்