முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஆண்டு முதல் மாநில வாரியாக பருவமலை குறித்த அறிவிப்புகள் வரும்

திங்கட்கிழமை, 30 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - அடுத்த ஆண்டு முதல் மாநில வாரியாக பருவமழை குறித்த முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம்  வெளியிடயுள்ளது.  நாட்டில் பருவமழை, புயல், வெயில் போன்ற நிலவரங்களை தினமும் முன்கூட்டியே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. வடமேற்கு, மத்திய இந்தியா, தென்னக தீபகற்பம், கிழக்கு, வடகிழக்கு பிராந்தியங்களின் அடிப்படையில் அந்த வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது.  இந்நிலையில், மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பூமி அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

வரும் 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக பருவநிலை குறித்த வானிலை முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் என்றார். அவர் மேலும் கூறுகையில், தேசிய பருவமழை மிஷன்’ திட்டத் துக்கு ஏற்கெனவே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது ரூ.400 கோடியில் செயல்படுத்தப்படு கிறது. இதற்காக பெரிய கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டுவிட்டன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்