முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 நாள் பயணமாக ஜப்பான் சென்ற நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ஜப்பானிய நிறுவனங்களின் முதலீட்டை பெற பேச்சு வார்த்தை

திங்கட்கிழமை, 30 மே 2016      உலகம்
Image Unavailable

டோக்யோ  -6 நாள் பயணமாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஜப்பான் சென்றார். அவர் அங்குள்ள நிறுவனத்தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இந்தியாவில் முதலீடு செய்ய கூறுகிறார். நிதியமைச்சர் அருண்ஜெட்லி 6 நாள் அரசுமுறைப்பயணமாக ஜப்பான் தலைநகர் டோக்யோவிற்கு ஞாயிற்றுக்கிழமையன்று சென்றார்.  அங்கு அவர்  கூறுகையில், நாங்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஜப்பானிய நிறுவனங்களின் முதலீடுகளை இந்தியாவில் பெற்று இருக்கிறோம்.

ஜப்பான் பிரதமர் சின்சோ அபே இந்த முதலீட்டை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறார். ஜப்பானிய முதலீட்டாளர்களை தனித்தனியாகவும்  கூட்டாகவும் சந்தித்து பேசி வருகிறேன். ஜப்பானிய அரசுடன் இந்தியா முன்னோக்கி செல்ல வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், ஜப்பானின் இதர முதலீட்டாளர்களும் தனி முதலீடுகளை இந்தியாவில் மேற்கொள்ள விரும்புகிறார்கள். இந்தியாவின் உள்கட்டமைப்பு முதலீடு நிதியத்தில் (என்.ஐ.ஐ.எப்)இணைவதற்கு ஜப்பானிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். என்.ஐ.ஐ.எப். ரூ40ஆயிரம்கோடி தொகுப்பு நிதியுடன் அமைக்கப்பட்ட அமைப்பாக உள்ளது.

இதில் பகுதியளவு தனியார் முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் நின்றுபோன திட்டங்களுக்கும் நிதியளிப்பதற்காக முதலீடு செய்து இருக்கிறார்கள். என்.ஐ.ஐ.எப் நிதியத்தில் 49சதவீத பங்குகள் அரசுக்கு உரியதாக இருக்கும், இதர நிதி கள் பல தரப்பட்ட வளர்ச்சி வங்கிகள், ஓய்வூதிய நிதி மற்றும் இதர நிறுவனங்களில் இருந்து பெறபப்படுகிறது. மின் நிதி கழகம் மின் இணைப்பு கழகம் ஆகியவை சில திட்ட செயல்பாடுகளுக்கு கடன் உதவி அளிக்கின்றன.  என்றார். ஜெட்லி நேற்று ஜப்பானிய பிரதமர் அபே மற்றும் இதர ஜப்பானிய அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அவர் நேற்று எதிர்காலஆசியா மாநாட்டில் கலந்து கொண்டார்.

ஆனால் மாநாட்டில் அவர் எதுவும் பேசவில்லை. இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பங்கேற்க ஜப்பானிய முதலீட்டாளர்களும், ஜப்பானிய நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றனர். ஜப்பானின் மிகப்பெரும் நிறுவனமான சாப்ட் பாங்க் குழுமம் இந்தியாவில் சூரிய ஒளி திட்டத்தில் மிகப்பெரும் முதலீடு செய்ய விரும்புகிறது.அந்த நிறுவனம் ஆந்திராவில் சூரிய ஒளி மின்சார திட்டத்தில் பங்கேற்க தீவிரஆர்வம் கொண்டுள்ளது. இந்த நிலையில் சாப்ட் பாங்க்கின் தலைமை செயல்  அதிகாரி மசாயோஷியை டோக்யோவில்ஜெட்லி சந்தித்து பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்