முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிகப் பெரும் ஐ.டி. நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் சத்ய நாதள்ளா பிரதமர் மோடியுடன் சந்திப்பு

திங்கட்கிழமை, 30 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - உலகின் மிகப்பெரும் ஐ.டி. நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சத்ய நாதள்ளா பிரதமர் மோடியை தலைநகர் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். நாதள்ளா ஹைதரபாத்தை சேர்ந்தவர் ஆவார். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சத்ய நாதள்ளா சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

உலகின் மிகப்பெரும் கம்யூட்டர் நிறுவனமான மைக்ரோ சாப்ட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள சத்ய நாதள்ளா நேற்று பிரதமர் மோடியையும் இதர அமைச்சர்களையும் சந்தித்து பேசினார். அப்போது ஐ.டி.துறையில் தற்போது நிலவும் பிரச்சினைகள், மற்றும் இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் மைக்ரோ சாப்ட் நிறுவனம் கூட்டு சேர்ந்து திட்டங்களை மேற்கொள்ளுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் பிறந்த சத்ய நாதள்ளா 3வது முறையாக தற்போது தனது தாய் நாட்டிற்கு வந்துள்ளார்.

  அவர் கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றார். அவர் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஐ.டி துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இணை நிதியமைச்சர்  ஜெயந்த் சின்கா மற்றும் தொழில் துறையின் முக்கிய தலைவர்களை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ஐ.டி.துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து, மைக்ரோ சாப்ட் நிறுவனத்தலைவர் சத்ய நாதள்ளாவுடன் விவாதித்தோம் என்று தெரிவித்துள்ளார். இந்த விவாதங்கள் குறித்து மேலும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.  

ஆப்பிள் நிறுவனத்தலைவர் டிம் குக் சமீபத்தில் இந்தியாவிற்கு 4நாள் பயணமாக வந்து, பிரதமர் மோடி மற்றும் தொழில் துறை தலைவர்களை சந்தித்து பேசினார். அவரது வருகையை தொடர்ந்து தற்போது மைக் ரோசாப்ட் நிறுவனத்தலைவர் சத்ய நாதள்ளா தற்போது வந்துள்ளார். இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் திட்டங்களுக்கு உதவுவதாக நாதள்ளாவும், டிம் குக்கும் உறுதியளித்து இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்