முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வு

திங்கட்கிழமை, 30 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழகத்தின் மின் நிலைமை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழகத்தில் மின்உற்பத்தியை மேலும் அதிகரிப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.

கடந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் பெரும் மின்பற்றாக்குறை ஏற்பட்டது. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், அப்போதைய அமைச்சர் ஆற்காடு வீராசாமியை மின்சார அமைச்சர் என்று கூறுவதற்கு பதிலாக மின்வெட்டு அமைச்சர் என்று மக்கள் கிண்டலாக அழைத்தார்கள். கடும் மின்வெட்டு காரணமாக தமிழகத்தில் தொழில்துறையினர் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். விவசாயிகளும் அவதிக்குள்ளாயினர். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு கடந்த 2011-ம் ஆண்டில் பதவிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தது முதல் மின்சார பற்றாக்குறையை நீக்க முதல்வர் ஜெயலலிதா தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

இதனால் தமிழகத்தில் படிப்படியாக மின் பற்றாக்குறை நீக்கப்பட்டது. தமிழகத்தில் மின்சார உற்பத்தி உபரியாக இருப்பதாக சட்டசபையிலும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். மேலும் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தமிழகத்தில் தி.மு.க ஆட்சியின் போது இருந்த மின்வெட்டையும், பிறகு தனது அரசு மேற்கொண்ட முயற்சிகளால் தமிழகத்தில் மின்வெட்டு நீக்கப்பட்டு மின்மிகை மாநிலமாக உருவாக்கப்பட்டதையும் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் தமிழகத்தில் மின் உற்பத்தியை மேலும் அதிகரிப்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், பொதுப்பணித்துறை மற்றும் எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் எம். சாய்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்