முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஆண்டு டி-20 போட்டியின் சிறந்த வீரராக விராட்கோலி தேர்வு

திங்கட்கிழமை, 30 மே 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை - இந்த ஆண்டின் டி-20 போட்டியின் சிறந்த வீரராக இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பந்துவீச்சாளராக சுழல் பந்துவீச்சாளர் அஸ்வினும், வாழ்நாள் சாதனை விருதை திலீப் வெங்சர்க்காரும் பெற்றார்கள். சியட் விருது வழங்கும் நிகழ்ச்சியில்  இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன. சியட் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடந்தது.  அப்போது, டி-20 போட்டியில் இந்த ஆண்டின் சிறந்த வீரராக விராட்கோலி  அறிவிக்கப்பட்டார். 

இந்த ஆண்டில் சர்வதேச அளவில் சிறந்த பந்து வீச்சாளராக சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.  இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட்  சியட் சர்வதேச கிரிக்கெட்டர் ஆப் தி இயர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது முடிவடைந்துள்ள 9-வது ஐ.பி.எல். டி-20 போட்டியில் இந்த ஆண்டு விராட் கோலி  16 போட்டிகளில் 973ரன்களை குவித்தார். இதன் மூலம் கோலி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.  60வயது வெங்சர்க்கார், 116 டெஸ்ட்டுகளை ஆடி 17 சதத்துடன் 6 ஆயிரத்து  868 ரன்களை எடுத்துள்ளார். அவர் 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.சியட் விருது பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விவரம் வருமாறு:

9வது ஐ.பி.எல். டி20 போட்டியின் சிறந்த வீரர் -விராட் கோலி.

வாழ்நாள் சாதனையாளர் விருது -திலீப் வெங்சர்க்கார்.
சர்வதேச கிரிக்கெட்டர் விருது- ஜோ ரூட்(இங்கிலாந்து).
சர்வதேச பேட்ஸ்மேன் விருது- ஜோ ரூட்.
சர்வதேச பந்து வீச்சாளர்- அஸ்வின்.
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர்- கனே வில்லியம்சன்.
சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர்- மார்ட்டின் கப்டில்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago