முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயமான இந்திய மலையேற்ற வீரர்களின் உடல்களை மீட்கும் முயற்சி கைவிடப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 31 மே 2016      உலகம்
Image Unavailable

காத்மாண்டு, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடையும் முன்பாக மாயமான இந்திய வீரர்கள் இருவரின் உடல்களை மீட்கும் முயற்சியை மீட்புக்குழுவினர் கைவிட்டனர்.

இந்திய மலையேற்ற வீரர்களான சுபாஷ்பால், பாரேஷ்நாத், கவுதம்கோஷ் மற்றும் ஒரு வீராங்கணை ஆகிய 4 பேர் கொண்ட குழு, எவரெஸ்ட் சிகரத்தை தொடும் முயற்சியில் ஈடுபட்டது.  கடந்த 21-ம் தேதி தங்களின் இலக்கான 8,848 மீட்டர் உயரத்தை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், பாரேஷ்நாத் மற்றும் கவுதம்கோஷ் ஆகிய இருவரிடம் இருந்தும் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான இருவரையும் தேடும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.

எவரெஸ்ட் சிகரத்துக்கும், அதற்கு முந்தைய முகாமான சவுத் கோலுக்கு இடைப்பட்ட பகுதியில், சுமார் 8,000 மீட்டர் உய ரத்தில் இருவரின் உடல்கள் தென்பட்டன. ஆனால், மோசமான வானிலை காரணமாக, இருவரின் உடல்களை மீட்கும் நடவடிக்கைகளை மீட்புக் குழுவினர் கைவிட்டுவிட்டனர்.  அடுத்த பருவத்தின் போது, உடல்களை கைப்பற்ற முடியும் என நம்புகிறோம் என, நேபாள மலையேற்ற முகாமைச் சேர்ந்த வாங்சூ செர்பா தெரிவித்தார். இவ்விருவருடன் மலையேறிய சுபால்பாலும், கடந்த ஞாயிற்று கிழமை உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மற்றொரு வீராங்கனை மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  நடப்பு மலையேற்றப் பருவத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை சுபாஷ்பாலுடன் சேர்த்து, 3ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago