முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடன் பாக்கியை பற்றி கவலைப்படாமல் ஐ.பி.எல் இறுதிப்போட்டியை லண்டனில் பார்த்து ரசித்த விஜய் மல்லையா

செவ்வாய்க்கிழமை, 31 மே 2016      உலகம்
Image Unavailable

லண்டன் -  ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டி பெங்களுரில்  நடந்தபோது அந்த போட்டியை தொழிலதிபர் விஜய் மல்லையா தனது மகனுடன் லண்டனில் பார்த்து ரசித்தார். இந்த காட்சியை அவரது மகன் சித்தார்த் வெளியிட்டுள்ளார். கடன் பாக்கியை பற்றி சிறிதும் கவலைப்படாமல் போட்டியை மல்லையா ரசித்த விவகாரம் இந்தியாவில் கோப அலையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 2 நாட்களுக்கு முன்னர் ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில்  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஹைதரபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

பெங்களூரு அணி விஜய் மல்லையா உரிமம் பெற்ற அணியாகும் எனவே இறுதிப்போட்டியை  கடன் தொல்லையால் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா தனது மகன் சித்தார்த்துடன் பார்த்து ரசித்துள்ளார்.இந்த வீடியோ காட்சியை சித்தார்த் வெளியிட்டு இருக்கிறார். விஜய்மல்லையாவுக்கு சொந்தமான  போர்ஸ் இந்தியா அணியும்  மொனாகோ கிராண்ட் பிரிஸ் போட்டியில் 3வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த தகவலையும் சித்தார்த் தான் வெளியிட்ட வீடியோவில் பதிவு செய்துள்ளார். நானும் எனது தந்தையும் லண்டனில் ஒன்றாக அமர்ந்து, ஐ.பி.எல். இறுதிப்போட்டியை பார்த்து ரசித்துள்ளோம் என தெரிவித்துள்ள சித்தார்த் தனது தந்தை இருக்கும் இடத்தை நோக்கியும் காமிராவை காட்டினார் .

அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணியே முன்னோக்கி செல் என்று விஜய் மல்லையா ஆர்வமாக கத்தியுள்ளார். விஜய் மல்லையா கிங் பிஷர் என்ற விமான நிறுவனத்தை நடத்தினார் ., நஷ்டத்தில் இயங்கிய அந்த நிறுவனத்தை நடத்த அவர்  பொதுத்துறை வங்கிகளிலும் இதர வங்கிகளிலும் ரூ 9ஆயிரத்து 400கோடி கடன் வாங்கினார் . இந்த கடனை கட்டாமல் அவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஐ.டி.பி.டி.ஐ வங்கியில் ரூ100கோடி கடன் வாங்கிய விவகாரத்தில் பண பரிவர்த்தனை மோசடி செய்த வழக்கையும் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

மேலும் விஜய் மல்லையாவை நாடு கடத்தவும் பிரிட்டனின் உதவியை இந்தியா நாடியது. ஆனால் பிரிட்டன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எங்கள் நாட்டு சட்டத்தின் படி விஜய்மல்லையாவை நாடு கடத்த முடியாது என்று தெரிவித்தது. இருப்பினும்  இந்த வழக்கு விசாரணையில் உதவ தயாராக இருப்பதாகவும் பிரிட்டன் கூறியது. கடந்த மார்ச் மாதம் முதல் விஜய் மல்லையா லண்டனில் இருந்து வருகிறார். அவர் நாடு திரும்பாமலும் கைதாகாமலும் தப்பி வருகிறார். கடன் பாக்கியை பற்றி சிறிதும் கவலைப்படாமல்  ஐ.பி.எல். போட்டியை விஜய் மல்லையா பார்த்து ரசித்த விவகாரம் இந்தியாவில் பெரும் கோப அலையை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்