முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க விமான தாக்குதலை தடுக்க சீனாவிடம் உதவி கோரும் பாகிஸ்தான்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2016      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நடத்தும் ஆளில்லா விமான தாக்குதலை தடுத்து நிறுத்த உதவுமாறு சீனா விடம் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதிகளில் தலிபான், அல்-காய்தா தீவிரவாதிகள் பதுங்கி வாழ்கின்றனர். அவர்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் அவ்வப்போது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திவருகிறது. பாகிஸ்தானின் குவெட்டாநகர் அருகே அண்மையில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டார்.

இது குறித்து அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறுகையில்:-

பாகிஸ்தானின் இறையாண்மையில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், பாகிஸ்தானிடம் முறைப்படி தகவல் தெரிவித்த பிறகே தாக்குதல் நடத்தப்பட்டது என்று அமெரிக்க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  இந்த பின்னணியில் அமெரிக்க தாக்குதலை தடுத்து நிறுத்த சீனாவிடம் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து ஐ.நா. சபையில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளன.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் ஐ.நா. சபையில் சீனா தாக்கல் செய்த அறிக்கையில் அமெரிக்கா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அதில் கூறியிருப்பதாவது, உலகம் முழுவதும் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வாதிட்டு வருகிறது. ஆனால் அந்த நாடு சிரியா, இராக்கில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இதேபோல பாகிஸ்தான் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நடத்தி வரும் ஆளில்லா விமான தாக்குதலில் அப்பாவிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்