முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தகம் செய்வதில் பிரச்சினை இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 130வது இடம்

புதன்கிழமை, 1 ஜூன் 2016      வர்த்தகம்
Image Unavailable

டோக்யோ  -  வர்த்தகம் செய்வதில் பிரச்சினை இல்லாமல் சுலபமாக தொழில் செய்ய ஏற்ற நாடுகளின்பட்டியலில் 130வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. கடந்த  ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 134வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4 இடம் முன்னேறியுள்ளது. இன்னும் 2ஆண்டுகளில் இந்த பட்டியலில் இந்தியாமிக வேகமாக முன்னேற உரிய சீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்தார். உலக நாடுகளில் வணிகம் செய்வதற்கு ஏற்ற சூழல் உள்ள189 நாடுகளை உலக வங்கி பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு தற்போது 130வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 134வது இடத்தில் இருந்தபோதும் தற்போது அந்த பட்டியலில் குறிப்பிடடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.  

உலக நாடுகளில் வணிகம் செய்வதில் மிகவும் ஏற்ற இடமாக நம்பர் ஒன் இடத்தை சிங்கப்பூர் பெற்றுள்ளது. இந்திய பொருளாதாரத்திற்கு சவால் எழுப்பும் வகையில் உள்ள ஆசிய நாடான சீனா 84வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஜப்பான் சென்றுள்ள நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று அந்த நாட்டின் தலைநகர் டோக்யோவில் நடந்த  மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டினை சர்வதேச பொருளாதார கல்வி நிறுவனம் நடத்தியது.  அதில் அருண் ஜெட்லி பேசுகையில்,  இந்தியாவில் வணிகம் செய்வதை மிகஎளிமையாக்குவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு(என்.டி.ஏ.) மேற்கொண்டு வருகிறது. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்தியா  வணிகம் செய்ய மிக சுமூகமான நாடு பட்டியலில் முன்னணிக்கு வரும். 

இந்தியாவில் நேரடி வரி விதிப்பு முறையை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மிக வேகமாக எடுக்கப்படுகின்றன.  அனைத்து விலக்குகளும் விலக்கிக்கொள்ளப்பட்டு, பெரு நிறுவன வரி விதிப்பு  30சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக கொண்டு வரப்படும்.தொழில் முதலீட்டாளர் இந்தியாவில் முதலீடு செய்ய வரும் போது, கடந்த கால வரி விதிப்பு முறை இருக்காது.  இந்தியாவில் முதலீடு செய்வதில் ஜப்பானிய நிறுவனங்கள் மிக பொறுமையாக இருப்பவர்கள்எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் தனி நபர் வருமானம் அதிகரித்து வருகிறது. அடுத்த 10ஆண்டுகளில் இந்தியாவில் தனி நபர் வருமானம் மேலும் பல மடங்கு அதிகரிக்கும். வாங்கும் சக்தி மக்களிடம் அதிகரிக்கும் நிலையில் இந்தியாவில் முதலீடு செய்வது சரியான நேரமாக இருக்கும்.

தற்போது இந்திய சந்தைகள்  முதலீட்டுக்கான வாய்ப்பு வாசலை திறந்து வைத்துள்ளது.அங்கு முதலீடு செய்வது எளிதாக இருக்கும். உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்யாதவர்கள் தங்களுக்கு உரிய வாய்ப்புகளை இழக்கிறார்கள் என்றே அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார்.  நிதியமைச்சர் ஜெட்லி  ஜப்பானில் உள்ள நிறுவனங்களின் முதலீடுகளை பெறுவதற்காக 6நாள் சுற்றுப்பயணமாக அங்கு சென்றுள்ளார். அவர் கடந்த வாரத்தில் பல தொழிலதிபர்கள் மாநாடு, கருத்தரங்கு  மற்றும் ஜப்பானிய தலைவர்கள், அந்த நாட்டின் பிரதமர் அபே  ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்