முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.50 டோக்கன் தரிசன முறை திருமலையில் மீண்டும் அமல்

சனிக்கிழமை, 4 ஜூன் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி  - திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக மீண்டும் ரூ.50 டோக்கன் தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் மட்டும் இந்த வசதியை பயன்படுத்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் திருமலை, திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் கலந்து கொண்டு பக்தர்கள் முறையிடும் புகார்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பெங்களூரு பக்தர் தெரிவித்த ஆலோசனையின் அடிப்படையில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான இலவச பேருந்துகளில் தங்கும் அறைகளின் அப்போதைய நிலவரம், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், தரிசன நேரம் உள்ளிட்ட தகவல்கள் உடனுக்குடன் ஒலி பெருக்கி மூலம் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும். இதனால் பக்தர்களுக்கு ஏற்படும் அலைச்சல் குறையும். ரூ.50 டோக்கன் தரிசன முறையை மீண்டும் கொண்டு வருமாறு ஏராளமான பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி இம்மாத தொடக்கத்தில் இருந்து மாலையில் மட்டும் ரூ.50 டோக்கன் தரிசன முறையை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு சாம்பசிவ ராவ் தெரிவித்தார். கோடை விடுமுறை முடியும் தருவாயில் இருப்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் இலவச தரிசனத்துக்காக 12 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதத்தில் இருந்து ஆன்லைன் மூலம் சுப்ரபாதம் 6,426, தோமாலை சேவை, அர்ச்சனை தலா 120, விசேஷ பூஜை 1,497, பிரம்மோற்சவம் 6,450 உட்பட 56,640 ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago