முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சத்திய மூர்த்தி பவனில் இளங்கோவன் - விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்கள் மோதல்

திங்கட்கிழமை, 6 ஜூன் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, சென்னை சத்திய மூர்த்தி பவனில் இளங்கோவன்-விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட திடீர் மோதலில் இளங்கோவனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டமன்ற தேர்தலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.இது தொடர்பாக பத்திரிகைகளுக்கு கருத்து தெரிவித்த விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் பற்றி பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தார். இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், விஷ்ணு பிரசாத்தை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் சத்தியமூர்த்தி பவன் முன்பு விஷ்ணுபிரசாத்தின் ஆதரவாளர்களான சண்முக சுந்தரம், ஜி.ஜி. இளங்குமரன், தளபதி பாஸ்கர், பயாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் திரண்டனர். அவர்கள் இளங்கோவன் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.அப்போது இளங்கோவன் ஆதரவாளர் ஒருவர் செல்போனில் படம்பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்ணுபிரசாத் ஆதரவாளர் ஒருவர் அவரை தாக்கினார்.இதையடுத்து சத்தியமூர்த்தி பவனில் இருந்த மற்ற இளங்கோவன் ஆதரவாளர்களும் வெளியில் ஓடி வந்தனர்.விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்கள் இளங்கோவனுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது முன்னாள் மாநில செயலாளரும் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளருமான ஆலடி சங்கரய்யா உள்ளிட்ட இளங்கோவன் ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.அப்போது விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்கள் இளங்கோவனின் உருவபொம்மையில் பெட்ரோல் ஊற்றினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களும் எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். இந்த நேரத்தில் ஒருவர் கல்வீச்சில் ஈடுபட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எற்படவில்லை. இந்த மோதல் காரணமாக சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago