முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 43 நாட்களில் திருப்பதியில் 35 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை  - திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திவ்ய தரிசன பக்தர்கள் பாதயாத்திரையாக திருப்பதிக்கு வந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததையடுத்து தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ ஆகியோர் தரிசன வரிசைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பொருட்கள் வைப்பறையில் ஆய்வு செய்தபோது, அங்குள்ள பறக்கும்படை ஊழியர்களிடம், பக்தர்களின் உடைமைகளை நவீன கருவிகளை கொண்டு தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். பக்தர்களிடம் இருந்து எந்தவித சிரமமின்றி பொருட்களை வாங்கி பாதுகாத்து, அதனை அவர்களிடம் திருப்பி கொடுத்து அனுப்ப வேண்டும் என்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை சுமார் 92 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  இலவச தரிசனத்துக்கு 24 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 10 மணி நேரம் கழித்து தரிசனம் செய்தனர்.

அதே போல் நடைபாதை பக்தர்கள் 6 மணி நேரமும், சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கூட்டம் அலை மோதியது. நேற்றும் தரிசனத்துக்கு பக்தர்கள் அதிகளவில் சந்திக்கின்றனர். சனிக்கிழமை மட்டும் ஒரு நாள் உண்டியல் வருவாய் ரூ.2 கோடியே 58 லட்சம் ஆகும். ஆதேபோல், கடந்த மாதம் 1ம் தேதி முதல் சனிக்கிழமை 11ம் தேதி வரை மொத்தம் 43 நாட்களில் 35 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த மாதத்தில் மட்டும் 1 கோடி லட்டு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago