முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி உடல்நிலை குறித்து வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் : குடும்பத்தினர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2016      சினிமா
Image Unavailable

சென்னை  - ரஜினி உடல்நிலை குறித்து வெளிவரும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் ரசிகர்களுகக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரஜினிகாந்த் தற்போது ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். ‘கபாலி’, ‘2.ஓ’ ஆகிய படப்பிடிப்புகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தால், ரஜினி கண்டிப்பாக ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அவருக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர். இதையடுத்தே, குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து இணையதளம் ஒன்று வதந்தியை பரப்பியது. 

இதையடுத்து, அந்த செய்தி சமூக இணையதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்தவுடன்  ரஜினி குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரஜினி உடல்நிலை குறித்து வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறியுள்ளனர்.  அவர் அமெரிக்காவில் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து வெளிவந்த செய்திகளை யாரும் நம்பவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஜூன் இறுதி வாரத்தில் அவர் அமெரிக்காவில் இருந்து திரும்புவார் என்றும் கூறியுள்ளனர். மேலும், ரஜினி உடல்நிலை குறித்து தவறான செய்தி வெளியிட்ட இணையதளத்தின் மீது சைபர் கிரைமில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago