முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.23 ஆயிரத்தை தாண்டியது : தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 472 ரூபாய் உயர்வு

வியாழக்கிழமை, 16 ஜூன் 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - தங்கம் விலை நேற்று பிற்பகல் சவரனுக்கு 472 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.23352-க்கு விற்பனை ஆனது. ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்றும் தங்கத்தின் விலை உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.384 அதிகரித்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.23 ஆயிரத்தை தொட்டது. நேற்று முன்தினம் மாலை கிராம் ரூ.2,860 ஆக இருந்தது. நேற்று காலை கிராமுக்கு ரூ.48 அதிகரித்து. ரூ.2,908-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் மாலை பவுன் ரூ.22,880 ஆக இருந்தது. நேற்று காலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.23,264-க்கு விற்பனையானது.

இதே போல வெள்ளி விலையிலும் உயர்வு காணப்பட்டது. கிராம் ரூ.46 ஆகவும், 1 கிலோ ரூ.42,985 ஆகவும் இருந்தது. இந்நிலையில், நேற்று பிற்பகல் நிலவரப்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு 59 ரூபாய் உயர்ந்து, ரூ. 2919-க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு 472 ரூபாய் அதிகரித்து ரூ.23352-ஆக இருந்தது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு 63 ரூபாய் உயர்ந்து ரூ.3122 என்ற அளவில் விற்பனை ஆனது. ஒரு சவரன் 24976-க்கு விற்பனை ஆனது.  இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.45.10-ல் இருந்து ரூ.46.10 ஆக உயர்ந்தது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.43055-க்கு விற்பனை ஆனது. நேற்று விலையேற்றத்தை அடுத்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்