முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு ஒப்புதல்: உள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டணம் குறைய வாய்ப்பு

வியாழக்கிழமை, 16 ஜூன் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - புதிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, உள்நாட்டு விமான கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இதன்படி ஒரு மணி நேர விமான பயணத்திற்கு ரூ.2500 கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
விமான போக்குவரத்து துறையில் விமான பயண கட்டணங்களில் அதிக அளவில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இதை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விரைவில் புதிய சீர்திருத்தங்களை கொண்டுவர மத்திட அரசு முடிவு செய்தது. விமான பயண கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய விமானப் போக்குவரத்து கொள்கைகளை மத்திய அரசு தயாரித்து வந்தது.

இந்நிலையில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த புதிய விமான போக்குவரத்து கொள்கை நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை முன்பு தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  புதிய விமான போக்குவரத்து கொள்கையால் உள்நாட்டு விமான போக்குவரத்திற்கான கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது. புதிய போக்குவரத்து கொள்கையில் ஒரு மணி நேர விமான பயணத்திற்கு ரூ.2500 கட்டணம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. கடந்த 18 மாதங்களாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தும், பல்வேறு கட்ட கலந்தாய்விற்கு பிறகும் தான் தயாரிக்கப்பட்டது.

இதில் உள்நாட்டு விமான சேவையில், 2022-ம் ஆண்டிற்குள் 30 கோடி ரூபாய்க்கு டிக்கெட்டுக்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 2027-ம் ஆண்டிற்குள் ரூ.50 கோடிக்கு விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சர்வதேச விமான சேவையில் 2027-க்குள் 20 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உலக அளவில் விமான போக்குவரத்தில் 9-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்