முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவரன் ரூ.22,952-க்கு விற்பனை தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை  - கடந்த சிலநாட்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் இருந்தது. ஆனால் நேற்று தங்கம்,சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.22 ஆயிரத்து 952-க்கு விற்கிறது.இதேபோல் வெள்ளி விலையும் குறைந்தது. கடந்த மே 3-ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.23 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னர் ஏற்ற இறக்கத்துடன் விற்று ரூ.23 ஆயிரத்துக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிரடியாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.472 உயர்ந்தது. பவுன் ரூ.23 ஆயிரத்து 352-க்கு விற்றது.

அதாவது விலை ரூ.23 ஆயிரத்தை கடந்தது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விலை உயரக்கூடும் என்ற அச்சத்தில் இருந்தனர். ஆனால் நேற்று தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது. அதிரடியாக பவுனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 952 ஆக உள்ளது.

அதே நேரத்தில் கிராமுக்கு ரூ.50 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,869-க்கு விற்பனை ஆகிறது. பங்கு சந்தையில் முதலீடு அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் உயர்ந்து இருந்த தங்கம் விலை குறைந்துள்ளது. எனவே உச்சத்துக்கு சென்ற தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1080 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 975 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.44.90-க்கு விற்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்