முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை விஜயசாந்தி வீட்டில் நகைகள் திருட்டு : 2 பணிப் பெண்கள் கைது, நகைகள் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2016      சினிமா
Image Unavailable

ஐதராபாத்  - நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயசாந்தி வீட்டில் தங்கம், வைர நகைகள் திருடு போனது.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் 186 திரைப்படங்களில் நடித்தவர் விஜயசாந்தி. சென்னையில் பிறந்த இவர், திரைத்துறையில் புகழ்பெற்ற பிறகு கடந்த 1991-ல் அரசியலில் கால் பதித்தார். ‘தல்லி தெலங்கானா’ என்ற கட்சியை தொடங்கினார்.  பின்னர் அந்தக் கட்சியை கலைத்து விட்டு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவர், 2009-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள எம்.எல்.ஏ குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் விஜயசாந்தி வீட்டில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வைர கம்மல்கள், மோதிரம் மற்றும் தங்க வளையல்கள் காணாமல் போனது. இதுகுறித்து பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.  இதைத் தொடர்ந்து போலீஸார் விஜயசாந்தி வீட்டில் பணிபுரியும் 2 பெண்கள் உட்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் நகைகளை திருடியதாக 2 பெண்கள் போலீஸாரிடம் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்த நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்