முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் : இலவச தரிசனத்துக்கு 11 மணிநேரம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை  - ஆந்திராவில் கோடை விடுமுறை முடிந்து, கடந்த வாரம் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டது. எனினும், திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.  அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் 22 ஆயிரம் திவ்ய தரிசன பக்தர்கள் பாதயாத்திரையாக திருமலைக்கு வந்தனர். அன்று வைகுண்டம் கியூகாம்ப்ளக்சில் 28 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. ஒரே நாளில் மொத்தம் 79 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இலவச தரிசனத்துக்கு 11 மணி நேரமும், திவ்ய தரிசனத்துக்கு 9 மணிநேரமும், 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்துக்கு 3.30 மணிநேரமும் ஆனது. ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 61 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நடந்து திருமலைக்கு வந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது. 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவஸ்தான அதிகாரிகள் மூலமாக ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் செய்து கொடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்