முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து த.மா.கா. விலகல் - ஜி.கே.வாசன் பேட்டி

திங்கட்கிழமை, 20 ஜூன் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் நலக் கூட்டணியுடன் செய்துகொண்டது தேர்தல் உடன்பாடுதான் என த.மா.கா. தலைவர் வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கும் 2019-ல் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கும் கட்சியை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி 6 கட்டங்களாக கட்சியின் பல்வேறு மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.7 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களின் கருத்துக்களை நேரடியாக கேட்டு அறிந்தேன். அதன் அடிப்படையில் எனது கருத்துக்களை வெளியிடுகிறேன். மக்கள் நலக்கூட்டணி என்பது வைகோ, ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகிய 4 பேரும் சேர்ந்து உருவாக்கியது. அந்த கூட்டணியில் சேர வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். சட்டசபை தேர்தலில் மாற்று அணி தேவை என்பதை உணர்ந்து மக்கள் நலக் கூட்டணியோடு தொகுதி உடன்பாடு வைத்துக் கொண்டோம். அதனால் தான் அந்த கூட்டணி தே.மு.தி.க.- மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. என்று அறிவிக்கப்பட்டது.

தனித்தனியாக தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்பட்டது. எனவே கூட்டணி தொடருமா? தொடராதா? என்ற கேள்வி எழவில்லை. கட்சியின் நிர்வாக வசதிக்காக 12 மண்டலங்களாக பிரித்து வருகிற 28-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்.ஜூலை மாத இறுதியில் இந்த சுற்றுப்பயணம் நிறைவுறும். ஒவ்வொரு பகுதியிலும் கிராமங்கள் தோறும் கட்சியை முழு அளவில் வளர்ப்பது பற்றி முடிவுகள் எடுப்போம். உள்ளாட்சி மன்ற தேர்தலை பொறுத்தவரை பல இடங்களில் தனிப்பட்ட முறையில் வெற்றி பெறும் அளவுக்கு வலுவாக இருக்கிறோம். எனவே வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளில் தனித்து வெற்றி பெறும் அளவுக்கு எங்களை நாங்கள் தயார்படுத்திக் கொள்வோம்.கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் பேசப்படுவது எனவே அதுபற்றி அப்போது முடிவு செய்வோம். வருகிற 24-ந்தேதி மக்கள் நலக் கூட்டணி சார்பில் நடத்தப்படும் இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு எனக்கும் அழைப்பு விடுத்துள்ளார்கள். அதில் கலந்து கொள்வேன்.தற்போது சட்டசபையில் பெரும்பாலான கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதற்கு காரணம் தேர்தல் ஜனநாயகப்படி நடக்கவில்லை. பண நாயகப்படி நடந்தது. சட்டசபையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இருக்கை வசதி செய்வது பற்றி பேசப்படுகிறது.கலைஞர் முன்னாள் முதல்-அமைச்சர், மூத்த தலைவர் அவரது வயது, அனுபவம் உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சரியான இருக்கை வசதிக்கான பணியை அரசு செய்யும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்