முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

324 சர்வதேச போட்டிகளில் கேப்டன்: பாண்டிங் சாதனையை சமன் செய்த டோனி

வியாழக்கிழமை, 23 ஜூன் 2016      விளையாட்டு
Image Unavailable

ஹராரே : இந்திய ஒருநாள் மற்றும் டி-20 அணிக்கான கேப்டன் டோனி, 324 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்துள்ளார் .

இந்திய அணி கேப்டன் டோனி, இவர் கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கேப்டனாக இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் பல்வேறு சாதனைகளை டோனி குவித்து வருகிறார். இந்திய அணிக்கு 2 உலகக்கோப்பைகளை (2007-ல் டி-20, 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பை) வாங்கிக் கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. அத்துடன் சாம்பியன் டிராபி, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் போன்ற சாதனைகளுக்கும் இவர் சொந்தகாரர்.

தற்போது சர்வதேச அளவில் அதிக போட்டிக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உடன் சாதனையை பகிர்ந்து உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்களில் ஒருவர் ரிக்கி பாண்டிங். இவர் 324 சர்வதேச போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கெதிரான 2-வது டி-20 போட்டி டோனி தலைமையில் நடைபெறும் 324-வது சர்வதேச போட்டியாகும். இதன்மூலம் ரிக்கி பாண்டிங் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இன்னும் ஒரு போட்டியில் கேப்டனாக பணிபுரிந்தால் சர்வதேச அளவில் அதிக போட்டிக்கு கேப்டனாக இருந்தவர் என்று பெருமையைப் பெறுவார். 3-வது வீரராக நியூசிலாந்து அணியின் கேப்டன் பிளமிங் உள்ளார். இவர் 303 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்