முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராவதால் பொருளாதார வளர்ச்சி மேம்படும்: பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

தாஷ்கண்ட்  -  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா இணைவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என பிரதர் மோடி தெரிவித்தார். உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உறுப்பினர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது,  எஸ்.சி.ஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைவதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் வலிமையடையும். எஸ்.சி,ஓ பிராந்தியத்திலும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராவதால் பிராந்தியத்தின்  வளத்திற்கு உதவியாக இருக்கும்.  இது அதன் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதாக இருக்கும்.

 துவேஷம், வன்முறை, தீவிரவாதம் ஆகியவற்றில் நமது மக்கள் பாதிக்காமல் இருக்க நமது கூட்டு உதவும். இலக்கை அடைவதற்கு எஸ்.சி.ஓ அமைப்புடன் இந்தியா இணைந்து பணியாற்றும். தீவிரவாதத்தை ஒடுக்க ஒருமித்த அணுகு முறையை மேற்கொள்ள நாங்கள் உதவுவோம். அனைத்து நிலைகளிலும் நாங்கள் உறுப்பினர்களுக்கு உதவியாக இருப்போம்.
எஸ்.,சி.,ஓஅமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு முழு ஆதரவு அளித்த உறுப்பினர் நாடுகளுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த அமைப்பில் புதிய உறுப்பினராக இடம் பெறும் பாகிஸ்தானையும் வரவேற்கிறோம்.

வர்த்தகம், முதலீடு, தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பம், விண்வெளி, வேளாண்துறை ஆகியவற்றில் இந்தியா திறன் வாய்ந்ததாக உள்ளது. இந்த அமைப்பில் உள்ள ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் , உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் பொருளாதாரளம் மற்றும் அனைத்துத்துறைகளிலும் கூட்டு வைப்பதால் அவர்களின் பொருளாதார வளமும் அதிகரிக்கும். நாங்கள் வடக்கு தெற்கு போக்குவரத்து பாதை, சப்பார் ஒப்பந்தம், மற்றும் அஷ்காபத் ஒப்பந்தம் ஆகிவற்றில் இணைய முடிவு எடுத்துள்ளோம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்