முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகல் : பிரிட்டன் பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

லண்டன்  - ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகல் எதிரொலியாக, பிரிட்டன் நாணயமான பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. 28 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து நீடிப்பதா, வெளியேறுவதா என்பது குறித்து நேற்று அந்நாட்டில் பொது வாக்கெடுப்பு நடந்தது. இங்கிலாந்து பெரும்பாலும் வெளியேற வாய்ப்பில்லை என தகவல் வெளியானது. மேலும் பிரபல ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் 51 சதவீதத்தினர் ஐரோப்பிய ஒன்றியத்தில்தான் இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தன.

இதனால் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. பல்வேறு துறைகளுக்காக குறியீட்டு எண்கள் உயர்ந்தன. ஆனால் வாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நிலையை அந்நாட்டு மக்கள் எடுத்ததை எடுத்து, இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை கண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 252 புள்ளிகள் குறைந்து 8,018 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது. இதேபோல் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 794 புள்ளிகள் குறைந்து 26,207-ல் வர்த்தகம் நடக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சியை கண்டுள்ளது.

பிரிட்டன் நாணயமான பவுண்டின் மதிப்பும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. 9 சதவிதம் சரிவு கண்டுள்ளது. 1985-ல் இருந்து முதல்முறையாக பிரிட்டிஷ் நாணயமான பவுண்டின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறிஉள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்