முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக மக்கள் ஆதரவு : பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுகிறார்

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

லண்டன்  - ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார்.  ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து நீடிப்பதா, வெளியேறுவதா என்பது குறித்து நேற்று முன்தினம் அந்நாட்டில் பொது வாக்கெடுப்பு நடந்தது. இங்கிலாந்து பெரும்பாலும் வெளியேற வாய்ப்பில்லை என தகவல் வெளியானது.

இருப்பினும் வாக்கு எண்ணிக்கை முடிவு உலக நாடுகள் அனைத்திற்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்தது. ஐரோப்பிய யூனியனில் தொடர்வதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும் பொதுவாக்கெடுப்பில் கடும் போட்டியில் ‘வெளியேறவேண்டும்’ என்ற தரப்பு வெற்றிபெற்றது. ஏறக்குறைய 52 சதவீத வாக்காளர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.  பொதுவாக்கெடுப்பில் 4.65 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். 71.9 சதவித வாக்குகள் பதிவானது. 382 மையங்களில் வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று 51.9 சதவித மக்கள் ஆதரவு (17,410,742) தெரிவித்து உள்ளனர்.

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலே இருக்க வேண்டும் என்று 48.1 சதவித மக்கள் ஆதரவு (16,141,241) தெரிவித்து உள்ளனர். மெஜாரிட்டியின் அடிப்படையில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற உள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து ஒரு சில ஆண்டுகளில் பிரிட்டன் வெளியேறும். இங்கிலாந்து தேர்தல் ஆணையம் பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர் என்று அறிவித்ததை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் டேவிட் கேம்ரூன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,  ”இந்த மிகப்பெரிய முடிவில் நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை கொண்டு உள்ளோம்,” ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் முழு பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராகவேண்டும். இந்த பிரசாரத்தில் நான் முழுமையாக, இதையப்பூர்வமாக, ஆன்மாவுடன் போராடினேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் கேம்ரூன் அறிவித்தார்.  முறைப்படி அக்டோபர் மாதம் பதவி விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்து உள்ளார்.

பிரிட்டன் மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறி உள்ள பிரதமர் டேவிட் கேமரூன் பேச்சுவார்த்தைக்கான பணியை புதிய பிரதமர் செய்வார் என்றும் தன்னுடைய முடிவை ராணியிடம் தெரிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இங்கிலாந்து, வேல்ஸ் வலிமையாக பிரிட்டன் வெளியேறுவதற்கும், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் நீடிக்கவேண்டும் என்பதற்கும் வாக்களித்து உள்ளன. வெளியேற விரும்பியவர்கள் இதனை ‘சுதந்திரம்’ என்று பாராட்டி உள்ளனர். ஆனால் ஐரோப்பிய யூனியனிலே பிரிட்டன் இருக்கவேண்டும் என்று விரும்பியவர்கள் ‘பேரழிவு’ என்று வருத்தத்துடன் கூறிஉள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago