முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதாநாயருக்கு பிடிவாரண்டு பிறபித்து நீதிபதி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்  - சோலார் பேனல் மோசடி வழக்கில், விசாரணை கமி‌ஷன் முன்பு ஆஜராகாததால் சரிதா நாயரை கைது செய்து வருகிற 27-ம் தேதி விசாரணை கமி‌ஷன் முன்பு ஆஜர்படுத்தப்படுமாறு பிடிவாரண்டு பிறபித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர். இவர் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் பொருத்தி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து விட்டு மோசடி செய்து விட்டதாக புகார் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் அவர் வெளியில் வந்துள்ளார். இந்த நிலையில் சோலார் பேனல் மோசடியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பதவி வகித்த பல அமைசர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு என்று சரிதா நாயர் புகார் கூறி இருந்தார். மேலும் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீதும் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சோலார் பேனல் மோசடி பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட கமி‌ஷன் தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை கமி‌ஷன் முன்பு உம்மன்சாண்டி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். சரிதாநாயரும் ஆஜராகி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் தனது புகார்களுக்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் அவற்றை தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும் அதற்கு தனக்கு அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதன் பிறகு அவர் எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. இதனால் விசாரணை கமி‌ஷன் பலமுறை சம்மன் அனுப்பியும் சரிதாநாயர் விசாரணை கமி‌ஷன் முன்பு ஆஜராகவில்லை. நேற்று முன்தினம் சரிதாநாயர் ஆஜராகாததால் அவருக்கு நீதிபதி சிவராஜன் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். சரிதா நாயரை கைது செய்து வருகிற 27-ம் தேதி விசாரணை கமி‌ஷன் முன்பு ஆஜர்படுத்தப்படுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago